Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தில் இனி இது கிடையாது…. நேத்தோட போட்டாச்சு தடை…

இங்கிலாந்தில் நேற்று முதல் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு தடை விதிக்கப்பட்டது  

உலக நாடுகள் பலவற்றில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பிளாஸ்டிக் கவர் போன்றவைகளுக்கு தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் பானங்களை கலக்கும் பிளாஸ்டிக் குச்சிகள் பிளாஸ்டிக் ஸ்டராக்கள் போன்றவை நேற்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அந்நாட்டில் 4.7 பில்லியன் ஸ்டராக்கள் 316 பானம் கலக்கும் பிளாஸ்டிக் குச்சிகள் 1.8 பில்லியன் பிளாஸ்டிக் பட்கள் உபயோகப்படுத்தப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் அந்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணத்தினால் அந்த தடை உத்தரவு தற்போது அக்டோபர் 1ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது. ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் முயற்சி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுக்க  தொடங்கியுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் சுற்றுச்சூழல் செயலர் கூறுகையில் பிளாஸ்டிக் ஸ்டரா குச்சிகள் போன்ற பொருட்களை தடை செய்வதனால் மாசுக்கு எதிராக நடக்கும் போரில் நாங்கள் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளோம். இதனால் சர்வதேச முயற்சியில் முன்னோடியாக திகழ்கிறோம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |