இங்கிலாந்து நாட்டில் அதிபர் போரீஸ் ஜான்சன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால், ஆளும் கன்சர்வேட்டிங் கட்சியினர் அதிபர் தேர்தலை நடத்தி வருகின்றனர். இந்த தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் ரிஷிஷ் சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகிய 2 பேரும் முன்னிலையில் இருக்கின்றனர்.
இந்நிலையில் அதிபர் தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றால் வரியை குறைப்பதாகவும், ரிஷி சுனக் தேர்தலில் வெற்றி பெற்றால் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் ஏற்கனவே கூறி இருந்தனர். இதனையடுத்து தற்போது ரிஷி சுனக் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் வரி விகிதத்தில் 20% குறைக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் வரி விதிப்பு குறைக்கப்படுவதால் கடுமையாக உழைக்கும் குடும்பங்களுக்கு பலன் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.