Categories
தேசிய செய்திகள்

“இங்கிருந்து போ டா” பூங்கா சென்ற தம்பதிக்கு…. நேர்ந்த கொடூர சம்பவம்…!!!!

அசாமை சேர்ந்த ராம் கிஷோர் என்பவர் வழிப்பறி செய்யும் ஒருவர் பணம் பறித்துவிட்டு கத்தியால் தாக்கி கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது.

அசாமை சேர்ந்த ராம் கிஷோர் என்பவர் டெல்லியில் மோமோ என்ற உணவுப் பண்டத்தை விற்பனை செய்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர் தனது மனைவியுடன் ஹரி நகர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றிற்கு பொழுதுபோக்க சென்றுள்ளார்.அப்போது இரவு 10 மணி அளவில் தனது மனைவியுடன் பூங்காவில் அமர்ந்து இருக்கும் போது ராஜ் தாஸ் என்பவர் கத்தியுடன் வந்து அவரை மிரட்டயுள்ளார். அவரிடம் ரூ.300 பணம் கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

ஆனால் தன்னிடம் பணம் இல்லை. இங்கிருந்து போ என கிஷோர் கூறியிருக்கிறார். இருப்பினும் அந்த நபர் தொடர்ந்து பணம் தரும்படி கேட்டு உள்ளதால் கிஷோர் அந்த நபரை தள்ளி விட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த கலவரத்தில் ராஜ் தாஸ் கிஷோரை கத்தியால் தாக்கியுள்ளார். மேலும் இதில் படுகாயமடைந்த கிஷோர் தரையில் சாய்ந்து ள்ளார். அதன்பிறகு கிஷோரிடம் இருந்து பர்ஸ் மற்றும் செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

மேலும் அவரது மனைவி அதிர்ச்சியில் உதவி கேட்டு அலறியதால் அவரது அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கிஷோர் குடும்பத்திடம் தகவல் தெரிவித்துவிட்டு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். இருபினும் கிஷோர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து போலீசார் 2 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |