Categories
தேசிய செய்திகள்

இஎம்ஐ கட்டணம் உயர்வு… கடன் வாங்கியவர்களுக்கு புது தலைவலி…!!!!

பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் தற்போது வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் அறிவித்துள்ளது. இதன்படி வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 2018 ஆம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக இப்போதுதான் வட்டியை உயர்த்தி உள்ளது. வழக்கமாக அமெரிக்கா ஃபெடரல் ரிசர்வ் வட்டியை  உயர்த்தும்போது உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது.

இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின் இப்போது வரை வட்டி விகிதம் உயர்த்தப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் கொள்கை கூட்டம் நடைபெற இருக்கிறது. அமெரிக்காவின் வட்டி உயர்வு நடவடிக்கையின் எதிரொலியாக இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என நம்பப்படுகிறது. வட்டி விகிதம் உயரும்போது வங்கி கடன்களுக்கான வட்டியை உயர்த்தியது.

மேலும் வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன் போன்ற பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்கிறது. இதனால் கடன்களுக்கான emi  தொகை அதிகரிக்கிறது ஏற்கனவே பணவீக்கத்தால் விலைவாசி ஏற்றம் அடைந்த பொதுமக்கள் கடுமையாக ஆளாகியுள்ள நிலையில் வட்டி உயர்வால் இஎம்ஐ கட்டண தொகை அதிகரித்து பொதுமக்களுக்கு emi  சுமை மேற்கொண்டு  அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |