ஹெலிகாப்டர் மூலமாக மதுரையை சுற்றி பார்க்கும் வசதி நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து மதுரையை சுற்றி பார்ப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வசதியானது டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்துள்ளார்.
ஹெலிகாப்டர் மூலமாக மதுரை சுற்றிப் பார்ப்பதற்கு சுமார் 30 நிமிடங்கள் சுற்றிபார்க்க ஒரு நபருக்கு 5,000 ரூபாய் கட்டணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து மதுரையின் அழகை சுற்றிப் பார்ப்பதற்கு பலரும் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.