Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… ‘லைகர்’ படத்தில் இணைந்த உலகப்புகழ் குத்துச்சண்டை வீரர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

விஜய் தேவர்கொண்டாவின் லைகர் படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் லைகர் படத்தில் பாக்ஸிங் வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சார்மி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

பூரி கனெக்ட்ஸ் மற்றும் தர்ம புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தனிஷ்க் பக்சி இசையமைக்கிறார். இந்நிலையில் லைகர் படத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் வில்லனாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விரைவில் மைக் டைசன், விஜய் தேவர் கொண்டா இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

 

Categories

Tech |