Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… ‘பீஸ்ட்’ படத்தில் இணையும் தனுஷ்?… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்றை பாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Dhanush's birthday wish to Vijay

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் பிரபல நடிகர் தனுஷ் பாடல் ஒன்றை பாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த பாடலின் வரிகளையும் தனுஷே எழுத இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |