இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இதையடுத்து இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பா.ரஞ்சித் நடிகர் ரஜினியை வைத்து காலா, கபாலி போன்ற ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் சூப்பர் ஹிட் அடித்தது.
தற்போது பா.ரஞ்சித் காதல் கதையம்சம் கொண்ட படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இளம் நடிகர் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் சார்பட்டா பரம்பரை படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.