தளபதி 66 படத்தில் இளம் நடிகை அனன்யா பாண்டே இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ‘தளபதி 66’ படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி தளபதி 66 படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த பிரம்மாண்ட படத்தை தில் ராஜூ தயாரிக்க இருக்கிறார்.
இந்த படம் அப்பா, மகளின் பாசத்தை மையப்படுத்தி உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை. இந்நிலையில் தளபதி 66 படத்தில் இளம் நடிகை அனன்யா பாண்டே இரண்டாம் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அனன்யா பாண்டேவிடம் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.