தனுஷின் 44-வது படத்தில் பாரதிராஜா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் ஹன்சிகா, ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
#Bharathiraja joins the cast of #D44.@dhanushkraja @anirudhofficial pic.twitter.com/uCTWeXofLj
— Sun Pictures (@sunpictures) August 4, 2021
விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் D44 படத்தில் பாரதிராஜா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன்-2 உள்பட பல படங்களில் நடிக்க இருக்கிறார்.