Categories
உலக செய்திகள்

“ஆஹா!”.. இதல்லவோ சுவை.. மில்க் ஷேக் குடித்த குழந்தையின் ரியாக்ஷன்.. என்ன அழகு நீங்களே பாருங்கள்..!!

முதன் முதலாக சாக்லேட் மில்க் ஷேக்கை சுவைத்த குழந்தை ஒன்று அதன் சுவை நன்றாக இருந்ததும் கைதட்டி மகிழும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  

தற்போதெல்லாம் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் அவர்களின் பெற்றோர் வீடியோ எடுத்து இணைதளங்களில் வெளியிடுகின்றனர். அவை உடனே வைரல் ஆகி விடுகிறது. மேலும் இதுபோன்ற குழந்தைகளின் வீடியோவை பார்க்கும் போது அனைவருக்குமே உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.

இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் நடப்பது, சாப்பிடுவது போன்ற அனைத்தையும் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். இந்த வகையில் ஒரு குழந்தை முதன்முதலாக சாக்லேட் மில்க் ஷேக் சாப்பிடுகிறது. அதன் பின்பு அந்த குழந்தை கொடுக்கும் ரியாக்ஷன் அவ்வளவு அருமையாக உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இதில் அக்குழந்தைக்கு டம்ளரில் உள்ள சாக்லேட் மில்க் ஷேக்கை தந்தை கொடுத்ததும் ஸ்ட்ரா வைத்து உறிஞ்சி குடிக்கிறது. அதன் பிறகு அதன் சுவை நன்றாக இருந்ததும் முகத்தில் மகிழ்ச்சியுடன் கை தட்டுகிறது. தற்போது இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதால் பலருக்கும் பகிர்ந்து வருவதோடு, லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் அள்ளி கொடுத்து வருகிறார்கள்.

Categories

Tech |