Categories
மாநில செய்திகள்

ஆஹா அப்படியே மாத்திட்டாரே… இதுதான் அரசியல் பேச்சோ?… என்ன ஒரு நடிப்பு…!!!

புதுச்சேரியில் புயல் பற்றி மாணவி கூறிய குற்றச்சாட்டை மொழிபெயர்த்த அம்மாநில முதல்வர் நாராயணசாமி ராகுல் காந்தியிடம் மாற்றி கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் சில மாநிலங்களில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று மக்களை நேரில் சந்தித்து பேசி வருகிறார். அதன்படி புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரி மாணவர்களிடம் ராகுல் காந்தி நேற்று கலந்துரையாடினார்.

அப்போது ராகுல் காந்தியுடன் நடந்த உரையாடலின் போது மீனவப் பெண் ஒருவர், புயலுக்குப் பின் எங்களுக்கு யாரும் ஆதரவாக இல்லை. முதல்வர் கூட எங்களை நேரில் வந்து பார்க்கவில்லை என குற்றம் சாட்டினார். ஆனால் அப்பெண் கூறியதை மொழிபெயர்த்த முதல்வர் நாராயணசாமி, நிவர் புயலுக்கு பிறகு முதல்வர் எங்களை நேரில் வந்து சந்தித்தார். நிவாரணங்களை யும் கொடுத்ததாக அந்த பெண் கூறுகிறார் என ராகுல் காந்தியிடம் மாற்றி கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |