Categories
மாநில செய்திகள்

ஆஸ்திரேலியா: வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து…. பின்னலாடை ஏற்றுமதி இரட்டிப்பாகும்…..!!!!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தையானது நடைபெற்று வந்தது. இதையடுத்து இரு தரப்பிலும் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வர்த்தக ஒப்பந்தமானது கையெழுத்தானது. இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கான இந்திய ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சிபெறும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இந்நிலையில் இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பின் தலைவரான சக்திவேல் இது குறித்து கூறியுள்ளார். அதாவது, “இவ்வாறு பொருளாதார வர்த்தக ஒப்பந்தமானது கையெழுத்தாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது இந்தோ மற்றும் பசுபிக்பிராந்தியத்தின் முக்கிய வர்த்தக ஒப்பந்தமாகும்.

இருநாடுகளுக்கு இடையிலான பொருட்கள், சேவை ஏற்றுமதிக்கான வர்த்தக வாய்ப்பு மேலும் அதிகமாகும். சென்ற 2021-2022ம் நிதியாண்டின் ஏப்., முதல் பிப்., வரையிலான ஆஸ்திரேலியாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 55 ஆயிரத்து 500 கோடி ரூபாயை எட்டி இருக்கிறது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலத்தை விட 100 சதவீதம் அதிகமாகும். நம் நாட்டின் மருந்து, ஆடை, ஜவுளி, பொறியியல், ஆட்டோமொபைல், வாகன உதிரி பாகங்கள், ரத்தினக்கல் மற்றும் ஆபரணம் உற்பத்தி துறைகளுக்கு இந்த ஒப்பந்தமானது கூடுதல் நன்மை அளிக்கும். இரு நாடுகளிலும் சுற்றுலா போக்குவரத்து அதிகமாகும். இதற்கிடையில் ஆஸ்திரேலியநாட்டு சந்தையில் சமநிலையினை ஏற்படுத்தி போட்டியாளர்களை எதிர்கொண்டு சந்தைவாய்ப்புகளை கைப்பற்றுவது இந்தியாவின் ஏற்றுமதியாளர்களுக்கு எளிதான ஒன்று.

இதனிடையில் 925 கோடி ரூபாய் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதற்காக வர்த்தகம் மற்றும் ஜவுளி அமைச்சர் பியூஸ் கோயலுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இந்திய ஏற்றுமதி துறைக்கு இந்த ஒப்பந்தமானது புதிய ஊக்கம் அளிக்கிறது. இதன் மூலம் வருகிற 2030-ல் நாட்டின் ஏற்றுமதி 75 லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டிவிடும். சென்ற 2021-2022ம் நிதி ஆண்டில் நம் நாட்டில் இருந்து ரூ.925 கோடி மதிப்பில் பின்னலாடை ரகங்கள், ஆஸ்திரேலியநாட்டிற்கு ஏற்றுமதியாகி இருக்கிறது. இது நாட்டின் மொத்தம் பின்னல் ஆடை ஏற்றுமதியில்2 % ஆகும். திருப்பூரில் இருந்து ரூ.630 கோடி செலவில் பின்னலாடைகள் ஆஸ்திரேலியநாட்டிற்கு ஏற்றுமதியாகியுள்ளது. புதிய வர்த்தக வாய்ப்புகள் மூலமாக அடுத்த 2 வருடங்களில் அந்நாட்டுக்கான திருப்பூரின் ஏற்றுமதி இரட்டிப்பாகும்.

Categories

Tech |