ஆஸ்திரேலியாவில் மக்களால் மிகவும் வெறுக்கப்பட்ட நபர் மீது கருணை காட்ட வேண்டும் என்று அவரின் சட்டதரணி கோரிக்கை வைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் மிகவும் வெறுக்கப்பட்ட நபரான 48 வயதான ரிச்சர்ட் பார்சி என்பவர் விசாரணைக் கைதியாக உள்ளார் .இவர் போதை பொருள் வைத்திருத்தல் ,கடுமையான காயம் ஏற்படுத்துதல், பொது ஒழுக்கத்தை மீறுதல் ,பொறுப்பற்ற நடத்தை ஆகிய 4 குற்றச்சாட்டுகளில் அவர் மீதுல்லது. பார்சியும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.மேலும் 4 விக்டோரியா காவல்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொல்லப்பட்ட கிழக்கு தனிவழி பாதையில் ஏற்பட்ட விபத்துக்கு பின் போலீசார் படுகாயத்துடன் கிடந்த நிலையில் அவரை படம் பிடித்து அவருக்கு உதவ முன் வராமல் பார்சி திட்டியுள்ளார்.
இந்த மோசமான செயலால் அவரை காவல்துறை கைது செய்து 268 நாட்களாக விசாரணை கைதியாக உள்ளார் . மேலும் அவர் மக்களின் வெறுப்பு மற்றும் கடுமையான கண்டனங்களுக்கு ஆளாகினார். தற்போது பாசியின் சட்டத்தரணி அவர் மீது இறக்கம் காட்டலாம் என்று கோரிக்கையை முன்வைத்துள்ளார். மேலும் பாசி காயமடைந்து கிடந்த காவல் அதிகாரியை அவமதிக்கவில்லை என்றும் அது பொதுமக்களின் கற்பனையே என்றும் கூறியுள்ளார்.
ஆனால் இவரின் இந்த வாதத்தை ஏற்காமல் ஆஸ்திரேலியாவின் மிகவும் வெறுக்கப்பட்ட நபர் இவர்தான் என்று நீதிபதி கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கு சம்பந்தமான தீர்ப்பு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது .