ஆஸ்கர் போட்டிக்கான படங்களில் அறிவிப்புகளை பிரியங்கா சோப்ரா அறிவிக்க உள்ளார்.
சிறந்த படத்திற்கு ஆஸ்கார் விருது வழங்குவது வழக்கம். இந்த ஆஸ்கர் விருது என்பது மிக உயரிய விருது. இந்த விருதுகளில் படங்கள் தேர்வாவது மிகவும் அரிது. இந்த முறை சில தமிழ் படங்களும் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பிடித்துள்ளது. சூர்யா நடித்த சூரரைப்போற்று படமும் தேர்வாகியுள்ளது.
23 பிரிவுகளில் இறுதிப் போட்டிக்கு தேர்வான படங்கள் குறித்த அறிவிப்பை வரும் 15ஆம் தேதி ஆஸ்கார் வலைதளம் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட உள்ளது. இந்த அறிவிப்பை நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் சேர்ந்து வெளியிட உள்ளார். ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஏப்ரல் 25ஆம் தேதி நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.