ஆஸ்கர் மேடையில் கிரிஸ் ராக்கை வில் ஸ்மித் தாக்கியதற்காக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
94 வது ஆஸ்கர் விருது விழாவில் கிங் ரிச்சர்ட் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் வில் ஸ்மித்துக்கு விருது வழங்கப்பட்டது. வில் ஸ்மித்தின் மனைவியை தொகுப்பாளர் கிரிஸ் ராக் கிண்டலடித்ததற்கு வில் ஸ்மித் அவரை தாக்கியுள்ளார். இதற்கு ஆஸ்கர் அகாடமி கண்டனம் தெரிவித்து வருகின்றது.
இந்நிகழ்வால் வில் ஸ்மித்துக்கு பலவகையில் எதிர்ப்புக்கள் எழுந்து வருகின்றநிலையில் ஆஸ்கர் அகாடமி விதிப்படி அவரின் விருதை பறிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகின்றது. விசாரணையும் தொடங்கியிருப்பதால் வில் ஸ்மித்க்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது.