Categories
இந்திய சினிமா சினிமா

ஆஸ்கர் விருது விழா… ஆறு விருதுகளை குவித்த “ட்யூன்” திரைப்படம்…!!!

“ட்யூன்” திரைப்படமானது ஆஸ்கர் விருது விழாவில் இதுவரை ஆறு விருதுகளை குவித்துள்ளது.

94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகின்றது ஹாலிவுட்டின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது நிகழ்ச்சியை ஏமி ஷூமர், வாண்டா லைக்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரை 6 ஆஸ்கர் விருதுகளை குவித்துள்ளது “ட்யூன்” திரைப்படம். 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட இப்படம் சிறந்த படத்தொகுப்பு, பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, தயாரிப்பு வடிவமைப்பு, விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட ஆறு விருதுகளை வென்றிருக்கிறது. இன்னும் சில பிரிவுகளில் இப்படத்திற்கு ஆஸ்கர் விருதுகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |