சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை “கோடா” திரைப்படம் வென்றுள்ளது.
94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஹாலிவுட்டின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை ஏமி ஷூமர், வாண்டா லைக்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் சியான் ஹெடர் இயக்கிய “கோடா” படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. 2014ஆம் வருடம் ஃப்ரெஞ்சு மொழியில் வெளியான “ஃபேமிலி பெல்லியர்” என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆன இப்படம் சிறந்த தழுவல் திரைக்கதை காண ஆஸ்கர் விருதையும் வென்றிருக்கின்றது. இப்படத்தில் நடித்த ட்ரான் கோட்சுர் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இப்படம் ஏற்கனவே கோல்டன் குளோப், பாஃப்டா உள்ளிட்ட சர்வதேச விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.