சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கார் விருது போட்டியில் ஒரு படி முன்னேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேப்டன் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் சூரரைப்போற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருப்பார்கள். இந்த படம் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தை ஆஸ்கார் போட்டிக்கான பொதுப்பிரிவு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிட அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது இந்த படம் ஆஸ்கர் விருதை நோக்கி ஒரு படி முன்னேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்கார் விருது போட்டிக்கு இறுதியாக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் 356-வது படங்கள் வரிசையில் இந்த படம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை பிரிவில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படங்களுக்கு பார்வையாளர்கள் அளிக்கும் ஓட்டின் அடிப்படையில் விருது வழங்கப்படும் . எனவே சூரரைப்போற்று திரைப்படம் ஏதாவது ஒரு விருது பெற்று விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.