ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடந்த பரபரப்பு சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.
94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஹாலிவுட்டின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை ஏமி ஷூமர், வாண்டா லைக்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
The uncensored exchange between Will Smith and Chris Rock#WillSmith #ChrisRock pic.twitter.com/j4BpMIk2ux
— NOW LIVE (@now_livee) March 28, 2022
இந்நிலையில் ஆஸ்கர் விருது மேடையில் ஸ்டாண்ட் அப் காமடியன் க்ரிஸ் ராக்கை, நடிகர் வில் ஸ்மித் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறந்த திரைப்படத்துக்கான விருதை அறிவிக்க மேடைக்கு வந்த க்றிஸ் ராக், வில் ஸ்மித் மனைவி குறித்து பகடியாக ஏதோ சொல்ல, அதனால் கோபமடைந்த வில் ஸ்மித் மேடையில் ஏறி க்றிஸ் ராக்கை பளார் என்று அறைந்து விட்டு இறங்கி வந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.