தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் தொடர்பாக 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்க வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் சா மு நாசர் தலைமையில் சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது” வரும் காலம் மழை காலம், பண்டிகை நாட்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனைத்து இடங்களிலும் பால் தங்கு தடை இல்லாமல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கூடுதல் வாகனங்கள் மூலமாக உடனுக்குடன் பால் விநியோகம் செய்ய வேண்டும்.
பால் விற்பனை மையங்கள், பாலகங்கள் ஆகியவற்றிற்கு அதிகாரிகள் அடிக்கடி சென்று ஏதேனும் குறை இருக்கின்றதா? என்பதை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும். பால்வினியோகம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை பெற 18004253300 என்ற கைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய ஆவின்@ AavinTN
என்ற முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்யலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.