மாற்றுத்திறனாளிகள் வாடகை மற்றும் முன்பணம் செலுத்த வேண்டாம் என உத்தரவு வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபையில் நடந்த மானிய கோரிக்கை விவாதத்தின் போது மாற்றுத்திறனாளிகள் அரசு வளாகங்களில் ஆவின் பாலகம் அமைத்து நடத்தி வந்தால் அதற்கு முன்பணம் மற்றும் வாடகை பணம் செலுத்த வேண்டாம் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக மாற்றித்திறனாளிகள் நல இயக்குனரகம் சார்பில் அரசுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பபட்டது. அதில் மாற்றுத்திறனாளிகள் 200 பேர் பயனடையும் வகையில், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூபாய் 50,000 வழங்கப்படுகிறது. இந்த பணத்தின் மூலம் ஆவின் பாலகம் வைத்து நடத்தும் மாற்றுத்திறனாளிகள் முன்பணம் மற்றும் வாடகை செலுத்துவதால் அவர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே ஆவின் பாலகம் நடத்துவதற்கு முன்பணம் மற்றும் வாடகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
அதன் பிறகு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளால் இணைந்து தேர்ந்தெடுக்கப்படும் மாற்றுத் திறனாளிகள் மட்டுமே கடை நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதால் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக இயக்குனர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி பொதுப் பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளால் ஒதுக்கப்படும் இடங்களில் தேர்ந்தெடுக்கப் படும் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் வைத்து நடத்தலாம். இந்த இடத்திற்கு வாடகை பணம் செலுத்த வேண்டாம். மேலும் பாதுகாப்பு தொகை, முன் பணம் மற்றும் வாடகை பணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் உத்தரவிட்டார்.