Categories
மாநில செய்திகள்

“ஆவின் நிறுவனத்தின் குடிநீர் பாட்டில் விற்பனை”…. தமிழக அரசின் புதிய திட்டம்….!!!!!!!!

தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் குடிநீர் பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாக பால் வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய ஆலோசனை நடைபெற்று வருகின்றது. ஆவின் மூலமாக பால் மட்டும் அல்லாமல் மோல், தயிர், லெஸ்லி, இனிப்புகள் போன்ற பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்டுக்களிலும் ஆரோ  வாட்டர் பிளான்ட்  இருப்பதால் விரைவில் குடிநீர் பாட்டில் தயாரிப்பு பணி தொடங்கி இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் பாட்டில்களை தயாரித்து பேருந்து நிலையம் போன்ற முக்கிய இடங்களில் ஆவின் குடிநீரை விற்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

தற்போது தண்ணீர் பாட்டில் மற்றும் லேபிள் போன்ற வடிவமைப்புகளை இறுதி செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆவின் பால் பாக்கெட்டுகளில் அரசு விளம்பரங்கள் மற்றும் சிறப்பு நாட்கள் தொடர்பான புகைப்படம் விளம்பரங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் வருமானத்தை அதிகரிக்க பால் பாக்கெட்களில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவது பற்றியும் பரிசீலனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

Categories

Tech |