Categories
தேசிய செய்திகள்

ஆவண நாற்காலியில் அமர்ந்து கொண்டிருப்பவர்கள்… மோடியை சாடிய ராகுல்காந்தி…!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் ஆதரவு பெருகியுள்ளது.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் ராகுல் காந்தி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “விவசாயிகளுக்கு நாம் அனைவரும் கடன் பட்டிருக்கிறோம். அவர்கள் மீது தடியடி நடத்துவதால் எந்த ஒரு பயனும் இல்லை. அவர்களுக்கான நீதியையும் உரிமையையும் வழங்கினால் மட்டுமே அந்த கடனை நம்மால் அடைக்க முடியும். ஆவணம் என்ற நாற்காலியில் அமர்ந்து கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து விழித்துக்கொண்டு விவசாயிகளுக்கான உரிமையை பெற்றுத்தர வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |