கடலில் மூழ்கிய விசைப்படகுக்கு அரசாங்கம் இழப்பீடு தரவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மற்றும் கேரளாவை சேர்ந்த 13 மீனவர்கள் கடந்த 18-ஆம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது கடந்த 22-ஆம் தேதி திடீரென படைகள் விரிசல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக கடலில் குதித்தனர்.
அப்போது மற்றொரு விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் உதவி கேட்டனர். இதனையடுத்து அவர்கள் கடலில் குதித்த 13 மீனவர்களை மீட்டு தேங்காய் பட்டினம் துறைமுகத்திற்கு பத்திரமாக அழைத்து வந்தனர். இருப்பினும் 25 லட்சம் மதிப்புள்ள விசைப்படகு கடலில் மூழ்கியது. அந்தப் படகில் சுமார் 15 லட்சம் மதிப்புள்ள மீன்கள் இருந்தது . எனவே இதற்குரிய இழப்பீட்டை அரசாங்கம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.