சீனாவில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் ஒரு பாண்டா கரடி பாதுகாப்பு வேலி மீது ஏறி தப்பிக்க முயற்சி செய்துள்ளது. சீனாவில் உள்ள பீஜிங் விலங்குகள் பூங்காவில் விலங்குகள் விளையாடுவதற்கு விளையாட்டு பொருட்கள் கொடுப்பது வழக்கம்.
அதேபோன்று 6 வயதுடைய பாண்டா கரடி விளையாடுவதற்காக ஒரு பந்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பந்தின் மீது ஏறி அதிலிருந்து பாதுகாப்பு வேலி மீது ஏறி தப்பித்து செல்ல முயற்சித்துள்ளது. பாண்டா கரடி. அதைப்பார்த்த பூங்கா ஊழியர்கள் பாண்டா கரடிக்கு பிடித்த உணவு பொருட்களை காட்டி அதை சமாதானம் செய்து உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர்.