Categories
தேசிய செய்திகள்

ஆளும் கட்சியின் பிரமுகர் படுகொலை….144 தடை உத்தரவு…. பெரும் பரபரப்பு சம்பவம்‌….!!!!

ஆளும் கட்சியின் பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை‌ ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்பம் மாவட்டம் தெலடாரூபள்ளி பகுதியில் உள்ள ஊரக மண்டல அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இந்த தேசியக்கொடியை ஆளும் தெலுங்கானா கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணைய்யா என்பவர் ஏற்றினார்.

இவர் தேசிய கொடியை ஏற்றிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து கிருஷ்ணய்யாவை கொடூரமான முறையில் தாக்கி படுகொலை செய்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் ஆளும் தெலுங்கானா காட்சியை சேர்ந்த பிரமுகர் கொல்லப்பட்டதால் அவருடைய ஆதரவாளர்கள் சிபிஎம் கட்சி தலைவரின் வீட்டிற்கு முன்பாக போராட்டம் நடத்தி அவரின் வீட்டில் கற்களை வீசி எறிந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Categories

Tech |