பீகார் மாநிலத்தில் முதல்-மந்திரி நிதீஷ் குமார் பக்தியார்பூர் நகரில் ஷீல்பத்ரா யாஜி என்ற சுதந்திர போராட்ட வீரரருக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற 2 நாட்களுக்கு முன்பு சென்றார். அப்போது அவருடன் பாதுகாவலர்களும் இருந்தனர். இதனிடையில் அவர் மலர் அஞ்சலி செலுத்தி கொண்டிருந்தபோது, வாலிபர் ஒருவர் மேடை ஏறி சென்று முதல்-மந்திரியின் தோளில் ஒரு குத்து விட்டுள்ளார். இதனை பார்த்ததும் அருகே இருந்த பாதுகாவலர்கள் உடனே வாலிபரை சூழ்ந்து கொண்டு தள்ளி சென்றனர். இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் அவர் நகை கடை ஊழியர் சங்கர் வர்மா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் நடந்து 2 நாட்களில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த மற்றும் நாகர் பரிஷத் அமைப்பின் துணை தலைவரான தீபக் குமார் மேத்தா என்பவரை அவரது வீடு அருகே வைத்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் 5 முறை சுட்டு விட்டு தப்பினர். இதனால் காயமடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதனிடையில் சொத்து விவகாரம் (அல்லது) அரசியல் பகையால் படுகொலை நடந்திருக்கலாம் என்று பாட்னா நகர போலீஸ் சூப்பிரெண்டு தில்லான் கூறியுள்ளார்.