சேப்பாக்கம் MLA உதயநிதி ஸ்டாலின் டிச.14ம் தேதி அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உதயநிதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் விழாவில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 15ஆம் தேதி மார்கழி தொடங்குவதால் அவசரமாக பணிகள் நடக்கிறதாம்.
தலைமை செயலகத்தில் அவருக்கான அறையும் தயாராகியுள்ளது. இந்நிலையில் அவர் பொறுப்பேற்க இருக்கும் இலாக்காக்கள், பொறுப்பேற்பு தேதி, மற்ற அமைச்சர்களின் இலாகா மாற்றம் அடங்கிய செய்திக் குறிப்பு நாளை வெளியாக இருக்கிறது.