பசும்பொன் முத்துராமலிங்கதேவர் ஜெயந்தியை முன்னிட்டு அங்கு சென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து, தமிழ்நாடு அரசு மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சாடினார்.
மேலும் அவர் பேசியதாவது “தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சந்து சிரிக்கும் நிலையில் இருக்கிறது. இதே நிலையானது தொடர்ந்தால் தி.மு.க ஆட்சி மக்களால் வீட்டுக்கு அனுப்பப்படும். 2017ல் இபிஎஸ் ஓபிஎஸ்ஐ யார் இணைத்து வைத்தார்களோ அவர் மனதுவைத்தால் தான் அதிமுக ஒன்றிணையும். அ.தி.மு.க என்பது வேறு ஒரு கட்சி.
அது குறித்து கருத்து கூற நான் விரும்பவில்லை. இதற்கிடையில் ஆளுநர் ஆர்என்ரவி ஓர் முக்கணாங்கயிறு போல செயல்படுகிறார். அவர் இல்லையென்றால் திமுக-வின் அராஜகம் அதிகரித்துவிடும். பாஜக-வுக்கு ஆதரவாக நான் இக்கருத்தை தெரிவிக்கவில்லை. தி.மு.க ஆட்சியில் தீவிரவாதம் அதிகரித்து இருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால் 1991 ஜனவரியின் நிலை மீண்டுமாக உருவாகும்” என்று டிடிவி தினகரன் பேசினார்.