Categories
மாநில செய்திகள்

“ஆளுநரை மாற்றுவது என்பது நடக்காத காரியம்”… அமைச்சர் எல்.முருகன் அதிரடி பேச்சு…!!!!

மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் 2 நாட்கள் பயணமாக புதுச்சேரிக்கு வந்துள்ளார். இதையடுத்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது “இந்திய அரசியல் சட்டப் படி தமிழக ஆளுநருக்கு கருத்து கூற உரிமை மற்றும் சுதந்திரம் இருக்கிறது. எனவே தி.மு.க அரசு நீட்டும் கோப்புகளில் கையெழுத்து போடும் கைப் பாவையாக ஆளுநர் இல்லை.

இதனிடையில் கோப்புகளில் சந்தேகம் எழுந்தால் கேள்வி கேட்கிறார். அதன் காரணமாகவே தமிழக ஆளுநரின் செயல்பாட்டை தி.மு.க-வினர் விமர்சிக்கின்றனர். மேலும் ஆளுநரை மாற்றவேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் ஆளுநரை மாற்றும் விஷயம் என்பது நடக்காத ஒன்றாகும். அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் தங்களது பணியைத் தான் செய்து வருகின்றனர். புதுச்சேரியை பொறுத்தவரை ஆளுநரும், முதல்வரும் இணைந்து அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

புதுச்சேரி முதலமைச்சரை எதிர்த்து பா.ஜ.க சட்டப்பேரவை உறுப்பினர் போராடிய பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் கலந்துகொண்டதில் தவறில்லை. தெலங்கானா மாநிலத்தில் ஆளும்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரம் பேசிய விவகாரத்தில் பாஜக-வுக்கு தொடர்பில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குமாறு முதல்வர் கோரியதை மத்திய உள் துறை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளும்” என்று பேசினார்.

Categories

Tech |