Categories
மாநில செய்திகள்

ஆளுநருக்கு செக் வைத்த முதல்வர் ஸ்டாலின்… முக்கிய அதிகாரத்தை பறிக்கும் தமிழக அரசு….!!!

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நேரடியாக மாநில அரசே நியமிப்பது தொடர்பான தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றுடன் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றிய பாஜக எம்எல்ஏ ஜி.கே
மணி தமிழக அரசு நிதியிலிருந்து கட்டப்பட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதில் காலதாமதம் ஆகிறது என்று கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி துணைவேந்தரை நியமிப்பதில் மாநில அரசின் பங்கு இருக்க வேண்டும் என முதலமைச்சர் கருதுகிறார் என கூறினார். இது தொடர்பாக சட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசு நியமிப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறினார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பாமக மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதனை சற்றும் எதிர்பார்க்காத காரணத்தினால் இது மத்திய அரசுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் ஆளுநராக பதவி ஏற்ற ஆர்.என்ரவி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் அழைத்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இது மாநில அரசுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. மேலும் பாடத்திட்டங்களை மாற்றுவது குறித்து ஆளுநர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். இதுதொடர்பாக மாநில அரசு ஆளுநர் சந்திப்பிற்கு பலமுறை முயற்சி செய்தும் நடக்கவில்லை.இதனை தொடர்ந்து ஸ்டாலின் இவ்வாறு காய் நகர்த்தி உள்ளார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றது.

Categories

Tech |