பிரபல சின்னத்திரை நடிகையான ஆல்யா மானசாவின் வீட்டில் ஒரே நேரத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சின்னத்திரை நடிகையாக மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. ராஜா ராணி1-ல் தொடங்கி ராஜா ராணி2 சீரியலிலும் நடித்து வந்தார். இந்த சீரியலில் நடிக்கும் போது இவருக்கும் சஞ்சீவ்விக்கும் காதல் மலர்ந்து திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.
சீரியலில் நடித்து வந்த இவர், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதால் அண்மையில் சீரியலிருந்து வெளியேறினார். இந்நிலையில் இவர்களின் மகள் ஐலாவின் பிறந்தநாள் வந்ததால் சீமந்தம் நிகழ்ச்சி பிறந்தநாள் நிகழ்ச்சி என இரண்டையும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.