பட்டாசு ஆலையில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஈஞ்ஞாறு பகுதியில் “நியூ பயர் ஒர்க்ஸ்” என்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் இந்த பட்டாசு ஆலை வெல்டிங் பணி நடைபெற்றுள்ளது. அப்போது திடீரென தீப்பிடித்து பட்டாசு ஆலை எரிந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அறையிலிருந்த பட்டாசுகள் அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.