Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆலயத்திற்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி….!!!

வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை பகுதியில் மரியம்மை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றுள்ளார். இவர் வழிபாடு முடிந்து வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மரியம்மை வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 1/2 பவுன் தங்க நகை மற்றும் 8,000 பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நித்திரவிளை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகத்தின் பேரில் அனிஷ் மற்றும் அஜ்மல் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் மரியம்மை வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது. இவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் முதலில் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததாக கூறியுள்ளனர். இப்படி கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வைத்து கஞ்சா வாங்கி விற்பனை செய்துள்ளனர். அதன்பிறகு வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருட ஆரம்பித்துள்ளனர். இந்த பணத்தில் மோட்டார் சைக்கிள் போன்ற ஆடம்பர பொருட்களை வாங்கி நண்பர்களுடன் சேர்ந்து இன்ப சுற்றுலா செல்வதாக அனிஷ் மற்றும் அஜ்மல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

Categories

Tech |