Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம்” வனத்துறையினரிடம் இருந்து தப்பித்த முதலை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஆற்றில் முதலையின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தீரன் நகர் பகுதியில் இருக்கும் கோரையாற்றில் முதலையின் நடமாட்டம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த முதலை சில நேரம் கரைக்கு வந்து படுத்து ஓய்வு எடுக்கிறது. பின்னர் பொதுமக்கள் நடமாடினால் அந்த இடத்தை விட்டு தப்பி தண்ணீருக்குள் ஓடி விடுகிறது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் முதலையை பிடிக்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் முதலை தண்ணீருக்குள் ஓடி தப்பியது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஆற்றில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம். மேலும் ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் பெய்த கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, முதலை தண்ணீரில் அடித்து வரப்பட்டு இங்கு தஞ்சமடைந்திருப்பதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பொது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |