Categories
உலக செய்திகள்

ஆற்றில் உயிருக்கு போராடிய பெண்…. பாய்ந்து சென்று காப்பாற்றிய இங்கிலாந்து தூதர்….!!

ஆற்றில் தத்தளித்த பெண்ணை இங்கிலாந்து தூதர் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகிறது

சீனாவில் உள்ள ஜாங்சன் நகராட்சியில் பிரிட்டன் தூதராக 61 வயதான ஸ்டீபன் எலிசன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இவர் ஜாங்சன் கிராமத்தின் அருகே அமையப் பெற்றுள்ள சுற்றுலா தளத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது இளம்பெண் ஒருவர் அங்கிருந்த ஆற்றில் தவறுதலாக விழுந்துவிட்டார். அவர் அலறியபடி தண்ணீரில் தத்தளித்துக் பின்னர் மயங்கினார். இதனைப் பார்த்த பிரிட்டன் தூதர் ஸ்டீபன் சற்றும் தாமதிக்காமல் ஆற்றில் குதித்து அந்தப் பெண்ணை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார்.

இதனை சுற்றுலா பயணி ஒருவர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட தற்போது 50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகியுள்ளது. இது குறித்து தூதர் கூறுகையில் “ஆற்றில் சுயநினைவு இழந்த நிலையில் கிடந்த அந்தப் பெண்ணால் மூச்சுவிட முடியாது. அவரை மீட்டு வெளியே கொண்டு வந்த பிறகுதான் அவர் மீண்டும் மூச்சு விடத் தொடங்கினார்” எனக் கூறினார். இந்த சம்பவம் குறித்து சீனாவில் அமைந்துள்ள இங்கிலாந்து தூதரகம், “தூதர் ஸ்டீபன் செய்த துரிதமான இந்த செயல் எங்களை பெருமிதம் கொள்ளச் செய்கிறது” என தெரிவித்துள்ளது.

Categories

Tech |