ஆந்திரப் பிரதேசத்தில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் மடிப்பாடு கிராமத்தில் 5 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
இந்த 6 பேரும் தவறுதலாக ஆழ்ந்த குழிக்குள் விழுந்தனர். அந்த 6 பேருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனே சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.