உக்ரைனில் தனது இராணுவப் பிரச்சாரத்தின் வேகத்தை குறைப்பதாக ரஷ்யா அறிவித்ததை தொடர்ந்து, தவறான தகவல்களை வேண்டுமென்றே ரஷ்யா பரப்புவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய படைகளின் மோசமான செயல்திட்டம் மற்றும் உக்ரைனின் வலுவான எதிர்ப்பு ஆகியவற்றால் நகரங்களை கைப்பற்றும் ரஷ்ய படைகளின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு ஆகியோர் குறைந்தது ஆறு இராணுவ ஜெனரல்களை நீக்கியுள்ளனர். இந்நிலையில் உக்ரைனில் பொதுமக்களின் உயிரிழப்புகளைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தால் ரஷ்யா வேண்டுமென்றே உக்ரைனில் தனது இராணுவ பிரச்சாரத்தின் வேகத்தை மெதுவாக்குகின்றது என 24 ஆகஸ்ட் 2022 அன்று, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை வெளியிட்ட தினசரி அறிக்கையில் கூறியதாவது, “ரஷ்ய படைகளின் தவறான நகர்வு, மற்றும் உக்ரைனிய படைகளின் வலுவான எதிர்ப்பு போன்ற காரணங்களால் தான் ரஷ்ய படைகளின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் ரஷ்ய படைகளின் முன்னேற்றம் குறித்து வேண்டுமென்றே ரஷ்யா தவறான தகவல்களை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார். மேலும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு பேசிக்கொண்டிருந்த நாளில், ரஷ்ய எஸ்எஸ்-26 இஸ்கந்தர் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையால் சாப்லைன் நகரின் ரயிலில் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.