ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை தமிழக அரசு கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி உத்தரவிட்டது. இதுதொடர்பாக சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் என 150 பேரிடம் இந்த ஆணையம் விசாரணை செய்தது.
இந்நிலையில் ஆறுமுகத்திற்கு மேலும் 6 மாத கால அவகாசம் நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது ஜெயலலிதா மரணம் குறித்து நடத்தப்படும் விசாரணைக்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ள இந்நிலையில் மேலும் 6 மாத காலம் நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.