ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்து வரும் புதிய படத்தில் யோகி பாபு இணைந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நானும் ரௌடிதான், தேவி, பூமராங் போன்ற படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஆர்.ஜே.பாலாஜி. இதை தொடர்ந்து இவர் ‘எல்.கே.ஜி’ படத்தின் மூலம் கதாநாயகனாகவும், இயக்குனராகவும் களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் இயக்கி நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது ஆர்.ஜே.பாலாஜி ‘வீட்ல விசேஷங்க’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
Guest Appearance in @RJ_Balaji Movie. pic.twitter.com/16WYZ95OGs
— Yogi Babu (@iYogiBabu) September 18, 2021
இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஊர்வசி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் வீட்ல விசேஷங்க படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பின் போது ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை யோகி பாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.