ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டதை கண்டித்து அனைத்து இந்து இயக்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை முன்பு இந்து முன்னணி மற்றும் அனைத்து இந்து அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கணேஷ் பாபுவை கைது செய்ததை கண்டித்தும், மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கியுள்ளார்.
இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ் மாநிலத் தலைவர் ஆடலரசன், இந்து முன்னணி பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ் கோட்ட செயலாளர் நாகராஜன், பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் சண்முகராஜா, இந்து முன்னணி மாவட்ட தலைவர் சக்திவேல், பாஜக மாவட்டத் தலைவர் முரளிதரன். இந்து முன்னணி நகர தலைவர் பாலமுருகன் உட்பட பல நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.