Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அடுத்த சிங்கிள் எப்போது ரிலீஸ்?… வெளியான அறிவிப்பு…!!!

ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற உயிரே பாடலின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்தாண்டு ஜனவரி 7-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் வருகிற நவம்பர் 26-ஆம் தேதி ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற உயிரே என்ற பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலரை டிசம்பர் 4-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .

Categories

Tech |