Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுல ஆர்வமிருந்தா கலந்துகோங்க… இணையதளம் மூலம் போட்டி… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

தேர்தலை முன்னிட்டு இணையதளம் மூலம் நடைபெறும் தேர்தல் விழிப்புணர்வு போட்டியில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட ‘பேட்ஜ்’கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ‘பேட்ஜ்’கள் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதையடுத்து அவர் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ‘பேட்ஜ்’களை வழங்கி நிகழ்ச்சியில் பேசினார். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி நடைபெற்று வருகிறது.

அதாவது தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுதல், மீம்ஸ் உருவாக்குதல், இணையதளம் மூலம் சுவரொட்டி வரைதல், கவிதை மற்றும் பாடல்கள் ஆகிய நான்கு பிரிவுகளில் வாக்காளர் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் [email protected] என்ற இணையதள முகவரிக்கு தங்கள் படைப்புகளை வருகின்ற 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தேர்தல் தாசில்தார் சரவணன், துணை மாவட்ட ஆட்சியர் விஸ்வநாதன் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |