நடைபெறும் புத்துணர்வு பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் படி புத்துணர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகள் குறித்து மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் தீபா கூறியதாவது. பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த வகுப்புகளில் மாணவர்கள் படம் வரைந்து வண்ணம் தீட்டுதல் , நன்னெறி மற்றும் நீதிக்கதைகள் கூறுதல், தனி நடிப்பு, விளையாட்டு, ஒரு பாடல் பாடுவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்த கதைகளை மாணவர்களுக்கு விளக்கமாக சொல்கின்றனர். அதேபோல் மாணவர்களும் தங்களது முன்னோர்கள் கூறிய கதைகளை தாங்களாகவே முன்வந்து சொல்கின்றனர். இந்த புத்துணர்வு பயிற்சி வகுப்பில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.