Categories
அரசியல்

ஆர்கிடெக்சர் படிப்பு: நாட்டா தேர்வு எப்போது தெரியுமா?…. வெளியான அறிவிப்பு…..!!!!!

ஆர்கிடெக்சர் படிப்புக்குரிய “நாட்டா” நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சிலான சிஓஏ வெளியிட்ட அறிவிப்பில், வரும் கல்வியாண்டில் பி.ஆர்க்., படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான  நாட்டா என்ற தேசிய ஆர்கிடெக்சர் நுழைவு தேர்வானது ஜூன் 3, ஜூலை 12, ஜூலை 24 என 3 கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது. தினசரி காலை மற்றும் பிற்பகல் என்று இருவேளைகளில் தேர்வு நடத்தப்படும்.

தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சில் விதிகளின் அடிப்படையில் மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்படும் ஜே.இ.இ., இரண்டாம் வினாத்தாளில் தேர்ச்சி பெறுவோருக்கும், பி.ஆர்க்., சேர்க்கை வழங்கப்படுகிறது. இதையடுத்து பிற கல்விநிறுவனங்களில் நாட்டா தேர்வு வழியே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கிடையில் தேர்வுக்கான விண்ணப்பபதிவு தேதி மற்றும் விபரங்கள், www.nata.in என்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |