Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆரோக்கியமான பருப்புக்கீரை கடையல் … செய்து பாருங்கள் …!!!

பருப்புக்கீரை கடையல் செய்ய தேவையான பொருள்கள்:

பருப்புக் கீரை              – 1 கட்டு
பாசிப்பருப்பு                 – 1/4 கப்
மிளகாய் தூள்              – 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்       – 4
மஞ்சள் தூள்                – 1/2 தேக்கரண்டி
கடுகு                                – 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்   – 10
சீரகம்                                – 1 தேக்கரண்டி
பூண்டு                              – 4 பல்
எண்ணெய்                     – 2 தேக்கரண்டி
தக்காளி                           – 1

உப்பு                                 – தேவைக்கேற்ப

 செய்முறை : 

முதலில் கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.இப்பொழுது பாதி தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.பின் வெங்காயத்தை பொடியாக வெட்டவும் . பின்னர் குக்கரில் பருப்பை வேக வைத்து கொள்ளவும். பிறகு கீரை, பாதி தக்காளி, பாதி வெங்காயம், பூண்டு, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து 1/4 டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு எடுத்து ஆறியதும், மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவேண்டும் .

அதன் பின்  வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், காய்ந்த மிளகாய் தாளிக்கவும்வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டி விடவும் .

பின்னர் மிளகாய் தூள் வாசம் மாறியதும், பருப்பையும், கீரையையும் சேர்க்கவும்.சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கவும். சுவையான பருப்புக் கீரை கடையல் தயார்.

Categories

Tech |