ஆரியன் கான் பல வருடங்களாக போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். என அரசு தரப்பு வக்கீல் வாதாடினார்.
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் மும்பை-கோவா சொகுசு கப்பல் ஒன்றில் போதைப் பொருள் கடத்துவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.இதனைத் தொடர்ந்து அங்கு போதை பொருள் விருந்து நடந்தது உறுதி செய்யப்பட்டு பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆர்யன் கான் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் ஜாமின் மனு ஆரியன் கான் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது அப்போது ஆரியன் கானுக்கு ஆதரவாக வாதாடிய வக்கீல் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஆரியன் கான் ஒரு கடத்தல்காரரோ அல்லது போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவரோ இல்லை. மேலும் அவரிடமிருந்து எந்த போதை பொருளும் கைப்பற்றப்படவில்லை. எனவே அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதை பொருள் தடுப்பு பிரிவு சார்பில் ஆஜரான சொழிசிட்டர் ஜெனரல் அணில் சிங். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவர் வெளிவந்தால் விசாரணை பாதிக்கப்படும் எனவும் மேலும் குற்றம்சாட்டப்பட்ட ஆரியன் கான் போதைப்பொருள் பழக்கமுடையவர் தான் எனவும் வாதிட்டார். மேலும் அர்பாஸ் மெர்சல் கைவசம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. ஆனால் ஆரியம் கான் கையில் போதை பொருள் இல்லை. இதனால் குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் வழக்கையும் தனித்தனியாக பிரித்து வாதிட முடியாது என அவர் கூறினார்.
மேலும் பிரமாண பத்திர தகவலின்படி போதைப் பொருள் கடத்தல் மற்றும் போதைப் பொருள் நுகர்வு என அனைத்து வகையிலும் ஆர்யன் கானுக்கு சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரை ஜாமீனில் விடுவித்தால் அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி மற்ற சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார். இதனை தொடர்ந்து ஜாமீன் மனு விசாரணை மும்பை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.