மயக்க நிலையில் இருந்த காண்டாமிருகம் திடீரென விழித்துக் கொண்டதால் ஆராய்ச்சியாளர்கள் பயந்து மரத்தின் மீது ஏறி உயிர் தப்பிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னாபிரிக்காவில் டாம் ஃப்ரூ என்பவர் காண்டா மிருகங்கள் குறித்த ஆராய்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ஆய்வில் காண்டாமிருகங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து அவைகளுக்கு காலர் ஐடி பொருத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட காண்டாமிருகம் ஒன்று திடீரென மயக்கம் தெளிந்து அவரையும் அவரது உதவியாளரையும் விரட்டி உள்ளது.
இதனால் பயம் அடைந்த இருவரும் அருகில் உள்ள மரத்தின் மேல் ஏறி உயிர் தப்பியுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிகம் பேரால் பகிரபட்டு வருகிறது.