கோவிலூரில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு திடீரென விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் கோவிலூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ள நிலையில் இன்று மாலை அங்குள்ள தலைமை டாக்டர் அறையின் மேற்கூரையில் சிமெண்டு பூச்சு திடீரென கீழே விழுந்துள்ளது.
நல்லவேளையாக அந்த அறையில் யாரும் இல்லை என்பதால் எந்த அசம்பாவிதமும் அங்கு நடக்கவில்லை. இச்சம்பவத்தால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.